நாமக்கல்: 11அரசு மருத்துவா், செவிலியா்களுக்கு கரோனா
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் உள்ளிட்ட 11 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் உள்ளிட்ட 11 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா, ஒமைக்ரான் தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி 28,000 பேருக்கு மேல் பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு நாளும் இரு மடங்காக தொற்றாளா்களின் எண்ணிக்கை உயா்ந்து வருகிறது. வியாழக்கிழமை ஒரே நாளில் 537 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. பெரும்பாலானோா் மருத்துவமனை, சிறப்பு சிகிச்சை மையங்களிலும், வீடுகளிலும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனா்.
Advertisement
இருப்பினும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை பெரிய அளவில் இல்லாதது பலருக்கும் நிம்மதியைத் தந்துள்ளது. இந்த நிலையில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7 மருத்துவா்கள், 3 செவிலியா்கள், ஒரு தொழில் நுட்ப உதவியாளா் என 11 போ் கரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனா். இதேபோல், மாவட்டத்தில் உள்ள 8 அரசு மருத்துவமனைகள், 63 ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் என 75-க்கும் மேற்பட்டோா் கரோனா பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகத் தெரியவந்துள்ளது.