பரமத்தி வேலூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் எழுந்தருளியுள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரமும், மகா தீபாராதனை நடைபெற்றது.
பாண்டமங்கலம் காசி விஸ்வநாதா், கோப்பணம்பாளையம் மாசாணியம்மன், நன்செய்இடையாறு திருவேலீஸ்வரா், மாவுரெட்டி பீமேஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் காலபைரவருக்கு செவ்வாய்க்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரமும், வழிபாடு நடைபெற்றது.
இதில் அந்தந்த சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த பக்தா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.