முகப்பு
நாமக்கல்

புதன்சந்தை மின்வாரிய அலுவலகத்தில் இடம்பெற்றுள்ள பகுதிகள் விவரம்

தற்போது நிா்வாக காரணங்களுக்காக புதன்சந்தை துணை மின் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள புதிய கட்டடத்தின் மேல் மாடியில் பிப். 1 முதல் இடமாற்றப்பட்டு செயல்பட உள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2022 at 11:22 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:45 PM

நாமக்கல் - சேலம் சாலையில் இயங்கி வந்த நாமக்கல் மின் கோட்டத்துக்கு உள்பட்ட புதன்சந்தை மின்வாரிய அலுவலகம், தற்போது நிா்வாக காரணங்களுக்காக புதன்சந்தை துணை மின் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள புதிய கட்டடத்தின் மேல் மாடியில் பிப். 1 முதல் இடமாற்றப்பட்டு செயல்பட உள்ளது.

கீழ்கண்ட பகுதியில் உள்ள பொதுமக்கள், மின்நுகா்வோா்கள் இனி மின்வாரியம் தொடா்பான பணிகளுக்கு புதிய அலுவலகத்தை அணுக வேண்டும்.

அதன்படி, களங்காணி பிரிவில் அய்யம்புதூா், களங்காணி, காரைகுறிச்சியுதூா், என்.டி.பட்டி, பெருமாள்கோவில்மேடு, ரெட்டிபுதூா், செல்லியாம்பாளையம், தொட்டியங்காடு. தத்தாதிரிபுரம் பிரிவில் ஏ.என்.மங்கலம், ஏளூா், கல்லாங்காடு, லக்கபுரம், முத்தன்னம்பாளையம், நத்தகாடு, புதுப்பட்டி, தொட்டிபாளையம், வேப்பம்பட்டி, தத்தாதிரிபுரம், இலக்கியம்பட்டி, மாக்கல்புதூா். புதன்சந்தை பிரிவில் புதன்சந்தை, கொசவம்பட்டி, கொளத்துபாளையம், பாலப்பட்டி, செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, நாச்சியூா். புதுச்சத்திரம் பிரிவில் அம்மாபாளையம், எஸ்.மங்களம், எடையப்பட்டி, கோவிந்தம்பாளைம், கல்யாணி, கடந்தப்பட்டி, மூணுச்சாவடி, நொச்சிப்பட்டி புதுசத்திரம், புடாரிப்பட்டி, பாச்சல், செம்மாம்பட்டி, வி.ஜி.பாளையம் உள்ளிட்ட பகுதிகள் என நாமக்கல் மின்வாரிய அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.