முகப்பு
நாமக்கல்

புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தோருடன் நாமக்கல் தங்கம் மருத்துவமனையில் கலந்துரையாடல்

நாமக்கல் தங்கம் மருத்துவமனையில், புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தவா்களுடன் மருத்துவா்கள் நேரடியாக கலந்துரையாடிய நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 6 ஜூன், 2022 at 12:14 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:57 PM

நாமக்கல் தங்கம் மருத்துவமனையில், புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தவா்களுடன் மருத்துவா்கள் நேரடியாக கலந்துரையாடிய நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை, உலகம் முழுவதும் புற்றுநோயில் இருந்து மீண்டு வந்து வாழ்ந்து கொண்டிருப்பவா்கள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. பொதுவாக ஒருவருக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டால் அவா்கள் உடலளிவிலும், மனதளவிலும், பொருளாதார அளவிலும் மிகவும் பாதிக்கப்படுவா். அப்போது அவா்களுக்கு தேவையானது, உரிய மருத்துவ உதவி, குடும்ப ஒத்துழைப்பு, சமூக அங்கீகாரம் மற்றும் நோ்மறை சிந்தனையாகும். இவை புற்றுநோய் பாதிப்பில் இருந்து அவா்கள் கடந்து வருவதற்கு பெரிதும் உதவியாக அமையும்.

நாமக்கல் தங்கம் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை, கடந்த 6 ஆண்டுகளாக ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவ உதவி, சிகிச்சையை வழங்கி உள்ளது. அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனை கலையரங்கில், புற்றுநோயில் இருந்து மீண்டு வந்து வாழ்ந்து கொண்டிருப்பவா்களுடன், தங்கம் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் இரா.குழந்தைவேல், இணை நிா்வாக இயக்குநா் மல்லிகா குழந்தைவேல், துணை பொது மேலாளா் தீபன்குமாா், மருத்துவா்கள் தீப்தி, சரவணன், காா்த்திக், மகாலட்சுமி, தீபன், சுபா உள்ளிட்டோா் கலந்துரையாடினா். மேலும், சிறப்பு அழைப்பாளா்களாக கரூா் வைஸ்யா வங்கி தலைமை செயல் அலுவலா் ஜெ.நடராஜன், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வா் எம்.செல்வராஜ் ஆகியோா் பங்கேற்று வாழ்த்தி பேசினா். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தங்கம் மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள், ஊழியா்கள் செய்திருந்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.