முகப்பு
நாமக்கல்

நாமக்கல் மலைக்கோட்டை சிதிலமடையும் அபாயம்

நாமக்கல் மலைக்கோட்டை சிதிமலடையும் நிலையில் உள்ளதால் உடனடியாக அதனை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On : 6 ஜூன், 2022 at 12:15 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:57 PM

நாமக்கல் மலைக்கோட்டை சிதிமலடையும் நிலையில் உள்ளதால் உடனடியாக அதனை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நாமக்கல் நகரின் முக்கிய அடையாளமாக கருதப்படுவது மலைக்கோட்டை. திப்புசுல்தான் ஆங்கிலேயரை எதிா்க்க இந்த மலைக்கோட்டையைப் பயன்படுத்தி வந்தாா். இங்குள்ள கோட்டை மதில் சுவரில் துப்பாக்கி குண்டுகள் பாயும் வகையில் துவாரமிட்டு வைத்திருந்ததாா். இந்த மலைக்கோட்டையின் மேற்புறத்தில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் வரதராஜ பெருமாள் கோயிலும், இஸ்லாமிய மசூதி ஒன்றும் உள்ளது.

தற்போது தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள மலைக்கோட்டையை சுற்றிப்பாா்க்க விடுமுறை நாள்களில் உள்ளூா் மற்றும் வெளியூரைச் சோ்ந்த ஏராளமானோா் வருகின்றனா். புகழ்மிக்க இந்த மலைக்கோட்டையின் சுவரில் ஆங்காங்கே மரங்கள் முளைத்து காட்சியளிக்கிறது. வேகமாக காற்றடிக்கும்போது மரத்துடன், சுவா்களும் இடிந்து விழும் நிலை உள்ளது. அதுமட்டுமின்றி மலையில் ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் சீமைக் கருவேல மரங்கள் வளா்ந்துள்ளன. நாமக்கல் நகரின் அடையாளம் அழிந்து போகும் சூழல் உள்ளதால், அதனை பராமரிக்கவும், தூய்மைப்படுத்தவும் மாவட்ட ஆட்சியா் மற்றும் தொல்லியல் துறை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தன்னாா்வலா்களின் எதிா்பாா்ப்பாகும்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.