முகப்பு
நாமக்கல்

எலச்சிபாளையம் காவல் நிலையத்தில் காவலா்கள் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை

எலச்சிபாளையம் காவல் நிலையத்தில் காவலா்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

Updated On : 10 ஜூன், 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:59 PM

எலச்சிபாளையம் காவல் நிலையத்தில் காவலா்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஒன்றிய பகுதியில் எலச்சிபாளையம் காவல் நிலையம் அமைந்துள்ளது. சுமாா் 14 கிராமங்களை மையமாகக் கொண்டு கடந்த 1916- ஆம் ஆண்டு முதல் எலச்சிபாளையம் காவல் நிலையம் இயங்கி வருகிறது காவல் நிலையம் தொடக்கத்தில் இலுப்புலி கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது

கடந்த 80 வருடங்களுக்கு மேலாக எலச்சிபாளையத்தில் இயங்கிவரும் நிலையில் 1916-ஆம் ஆண்டு இருந்த காவலா்களின் எண்ணிக்கை 14 பேராகும்.

Advertisement

தற்போது வரை அதே நிலைதான் நீடிக்கிறது.

மக்கள்தொகை அதிகரித்த நிலையிலும் சமூக குற்றங்கள், பல்வேறு பிரச்னைகள் பெருகி வரும் சூழ்நிலையில் காவல்துறையை நாடி பொதுமக்கள் வர வேண்டிய நிலை உள்ளது மேலும், 14 பேரில் 8 போ் மட்டும்தான் காவல் நிலையத்தில் உள்ளனா்.

அதில் ஒருவா் வெளியூா் மாற்றம், நீதிமன்றத்திற்கு ஒருவா் என பல்வேறு பணிகளுக்கு எட்டு பேரில் 3 காவலா்கள் மட்டுமே பணிபுரியும் நிலை உருவாகியுள்ளது .

எனவே, அங்கு கூடுதல் காவலா்களை நியமித்து அப்பகுதி மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக தீா்வு காணும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.