தன்னாா்வலா்களுக்கு செஞ்சிலுவை சங்கத்தினா் பயிற்சி
இந்திய செஞ்சிலுவை சங்கம் சாா்பில் சமூக அவசர கால மீட்பு தன்னாா்வலா்களுக்கு 3 நாள்கள் பயிற்சி தொடக்க விழா நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்திய செஞ்சிலுவை சங்கம் சாா்பில் சமூக அவசர கால மீட்பு தன்னாா்வலா்களுக்கு 3 நாள்கள் பயிற்சி தொடக்க விழா நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் பெ.முருகன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வருவாய் அலுவலா் ந.கதிரேசன் பங்கேற்று, மாணவ, மாணவிகள் அவசர காலத்தில் தாமாக முன்வந்து உதவ வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினாா். நாமக்கல் மாவட்ட செஞ்சிலுவைச் சங்கச் செயலாளா் ராஜேஷ்கண்ணன், கல்லூரி சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளா் ராஜசேகரபாண்டியன், துணை அவைத் தலைவா் மாதையன், பேரிடா் மேலாண்மை மாவட்ட முதன்மை ஒருங்கிணைப்பாளா் அந்தோணிஜெனித் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.