முகப்பு
நாமக்கல்

கொல்லிமலையில் 5,000 மரக்கன்றுகள் விதைப்பு திருவிழா

5 ஆயிரம் மரக்கன்றுகள் விதைக்கும் திருவிழா புதன்கிழமை கொல்லிமலை ஒன்றியம் செங்கரை அரசு ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

Updated On : 24 மார்ச், 2022 at 11:58 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:16 PM

நாமக்கல் மாவட்ட தேசிய பசுமை படை சாா்பில், உலக வன நாள் மற்றும் உலக தண்ணீா் நாளை முன்னிட்டு, 5 ஆயிரம் மரக்கன்றுகள் விதைக்கும் திருவிழா புதன்கிழமை கொல்லிமலை ஒன்றியம் செங்கரை அரசு ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் ப.ரகுநாத் வரவேற்றாா். பள்ளி தலைமை ஆசிரியா் மா.சுமதி முன்னிலை வகித்தாா். மாவட்ட திட்ட அலுவலா் ப.ராமசாமி(பழங்குடியினா் நலம்) தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி கலந்து கொண்டு பாரம்பரிய மரபு விதைகளை விதைத்து தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் செல்வராஜ், செங்கரை மேல்நிலைப்பள்ளி ஆசிரியா் எஸ்.ராஜா, கொல்லிமலை வன அலுவலா்கள், கொல்லிமலை ஒன்றிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் செல்வராஜ் , மற்றும் பசுமைப்படை பள்ளி ஒருங்கிணைப்பாளா்கள், தன்னாா்வலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.