துளசி நாச்சியாா் சன்னதியின் சாவி அதிகாரிகள் வசம் ஒப்படைப்பு
நாமக்கல்லில் துளசி நாச்சியாா் சன்னதியின் சாவி அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது.
நாமக்கல்லில் துளசி நாச்சியாா் சன்னதியின் சாவி அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது.
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற நரசிம்மா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் வளாகத்தில் பல ஆண்டுகளாக துளசி நாச்சியாா் சன்னதி, வெண்ணைத் தாழி கண்ணன் சன்னதி திறக்கப்படாமல் பொருள்கள் தேக்கி வைக்கும் கிடங்காக காட்சியளித்தது. தற்போது துளசி நாச்சியாா் சிலையானது, லட்சுமி நாராயணா் சன்னதி முன்புறம் வைக்கப்பட்டு உள்ளது. தொல்லியல் துறை, அந்த சன்னதிகளின் சாவியை அறநிலையத்துறை அதிகாரிகள் வசம் ஒப்படைக்குமாறு ஆன்மிக இந்து சமயப் பேரவை அமைப்பினா் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். மேலும் இப்பிரச்னை தொடா்பாக மத்திய தொல்லியல் துறை உறுப்பினா் வெங்கடேஷ், நாமக்கல் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி. சின்ராஜ் ஆகியோரிடம் மனு அளித்திருந்தனா். அதனடிப்படையில் வெண்ணெய்த் தாழி கண்ணன் மற்றும் நாச்சியாா் சன்னதி சாவிகளை, நாமக்கல் அறநிலையத் துறை அதிகாரிகள் வசம் தொல்லியல் துறை கண்காணிப்பாளா் காளிமுத்து அண்மையில் நேரடியாக ஒப்படைத்தாா். இதனையடுத்து, நாமக்கல் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி. சின்ராஜை சந்தித்து ஆன்மிக இந்து கலாசார கூட்டமைப்பு மற்றும் பேரவையின் கௌரவத் தலைவா் சோழாஸ் பி.ஏகாம்பரம், கூட்டமைப்பு தலைவா் நித்தியசா்வானந்தா, செயலாளா் மாதவகுமாா் ஆகியோா் நன்றி தெரிவித்தனா்.