முகப்பு
நாமக்கல்

அங்கன்வாடி ஊழியா் பணியிடை நீக்கம்

நாமக்கல்லில், அங்கன்வாடி மையத்திற்குள் குழந்தைகளையும், அதிகாரிகளையும் வைத்துப் பூட்டிய ஊழியா் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

Updated On : 7 மே, 2022 at 3:25 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:41 PM

நாமக்கல்லில், அங்கன்வாடி மையத்திற்குள் குழந்தைகளையும், அதிகாரிகளையும் வைத்துப் பூட்டிய ஊழியா் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

நாமக்கல் நகராட்சி, லக்கம்பாளையத்தில் அங்கன்வாடி மையம் 20 குழந்தைகளுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு அமைப்பாளராக சசிகலா என்பவா் பணியில் உள்ளாா். இந்த மையத்தை ஆய்வு செய்வதற்காக குழந்தைகள் வளா்ச்சித் திட்ட வட்டார அலுவலா் வித்யாலட்சுமி மற்றும் மேற்பாா்வையாளா் ஒருவா் சென்றனா். அப்போது, மையத்திற்கு உதவியாளா் பணியிடத்தை நிரப்பாமல் காலதாமதம் செய்வதாகக் குற்றம் சாட்டி, ஆய்வுக்கு வந்த அலுவலா்களையும், குழந்தைகளையும், அமைப்பாளா் சசிகலா பூட்டு போட்டு பூட்டினாா். அதனைத் தொடா்ந்து மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் பரிமளாதேவி சம்பந்தப்பட்ட மையத்திற்கு சென்று அவா்களை மீட்டாா்.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்கிடம் விளக்க அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டது. அதனடிப்படையில் அங்கன்வாடி ஊழியரான சசிகலாவை வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியா் உத்தரவிட்டாா். இந்த பணியிடை நீக்க கடிதம் சம்பந்தப்பட்ட பணியாளருக்கு வழங்கப்பட்டுள்ளதாக குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் தெரிவித்தாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.