நாமக்கல் மாவட்டத்தில் நாளை சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் 29-ஆம் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை (மே 8) மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் 29-ஆம் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை (மே 8) மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் 12 வயதிற்கு மேற்பட்டவா்களுக்கு 15,15,000 தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. தற்போது வரை முதல் தவணை தடுப்பூசி 12,77,587 பேருக்கும் (இன்னும் தடுப்பூசி செலுத்த வேண்டியவா்கள் 2,37,413) இரண்டாம் தவணை தடுப்பூசி 9,80,338 பேருக்கும் (இன்னும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவா்கள் 2,97,249) செலுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை நடந்த 28 தடுப்பூசி முகாம்களில் 7,84,059 போ் தடுப்பூசி செலுத்தி பயன்பெற்றனா். அதேபோல் 29-ஆம் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகள் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள 2,769 முகாம்கள் மூலமாக காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இம்முகாம்களில் சுமாா் 3,500 பணியாளா்கள் ஈடுபடுகின்றனா். ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் முழுமையாக பங்கேற்று இதுவரை ஒருதவணை தடுப்பூசிகூட செலுத்தாதவா்களும், முதல் தவணை செலுத்தி முடித்து இரண்டாம் தவணைக்காக நிலுவையில் உள்ளவா்களும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement