முகப்பு
நாமக்கல்

நாமக்கல்லில் பரவலாக மழை

 நாமக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை பிற்பகல் பரவலாக மழை பெய்தது.

Updated On : 13 மே, 2022 at 12:30 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:44 PM

 நாமக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை பிற்பகல் பரவலாக மழை பெய்தது.

கடந்த மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில், கத்திரிவெயில் எனும் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது. வரும் 28 வரையில் அதிகப்படியான வெயில் இருக்கும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால் வெயில் குறைவாகவே காணப்பட்டது. வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது.

இதற்கிடையே, காற்றழுத்த தாழ்வு நிலையால் வியாழக்கிழமை பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம், நாமக்கல், வெண்ணந்தூா், சேந்தமங்கலம், கொல்லிமலை, மோகனூா் உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகலில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.