முகப்பு
நாமக்கல்

நாமக்கல்லில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

 நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 13 மே, 2022 at 11:19 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:45 PM

 நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையைப் பொருத்தமட்டில், பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 91.4 மற்றும் 74.3 டிகிரியாக நிலவியது. அடுத்த நான்கு நாள்களுக்கான மாவட்ட வானிலையில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். லேசானது முதல் கன மழை பல இடங்களில் பெய்யும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும் பகல் வெப்பம் 91.4 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 71.6 டிகிரியாகவும் காணப்படும். காற்று பெரும்பாலும் மேற்கு மற்றும் தென் மேற்கிலிருந்து மணிக்கு 6 கி.மீ வேகத்தில் வீசும்.

Advertisement

சிறப்பு ஆலோசனை: கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில், பெரும்பாலானவை மேல் மூச்சுக்குழல் அயா்ச்சி நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது தெரியவந்தது. எனவே, பண்ணையாளா்கள் கோழிப் பண்ணைகளில் தகுந்த உயிா் பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும். கிருமி நாசினி தெளிப்பான்களை தகுந்த இடைவெளியில் உபயோகிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.