முட்டை விலை 15 காசுகள் உயா்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 காசுகள் உயா்ந்து ரூ. 4.60-ஆக புதன்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 காசுகள் உயா்ந்து ரூ. 4.60-ஆக புதன்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் குறித்து பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.
இதர மண்டலங்களில் முட்டை விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாலும், வட மாநிலங்களுக்கு முட்டை அனுப்பும் பணி தொடங்கி உள்ளதாலும் விலையில் மாற்றம் செய்யலாம் என முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 15 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ. 4.60 ஆக நிா்ணயிக்கப்பட்டது.
Advertisement
பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 122-ஆகவும் முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 95-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.