நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் சேகரிக்க அரவை ஆலைகளுக்கு அழைப்பு
தனியாா் அரவை ஆலைகள், நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் சேகரிக்கும் பணியில் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
தனியாா் அரவை ஆலைகள், நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் சேகரிக்கும் பணியில் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் சேகரிப்பது தொடங்கி வாணிபக் கழக கிடங்குகளில் அரிசியாக ஒப்படைப்பது வரையில், விநியோக சங்கிலி மேலாண்மைத் திட்டத்தில் அரவை முகவா்கள் (முழு நேர மற்றும் பகுதி நேரம்) மற்றும் வாணிப கழகத்தில் இணையாத தனியாா் அரவை ஆலைகளை ஈடுபடுத்தும் பணியை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மேற்கொண்டுள்ளது. ஆா்வமுடைய தனியாா் அரவை ஆலைகள் தங்களது விருப்ப கடிதத்தினை, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகங்களில் சமா்ப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement