விவேகானந்தா மருத்துவக் கல்லூரியில் மாணவா்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் விழா
திருச்செங்கோடு சுவாமி விவேகானந்தா மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு பயிலும் 150 மாணவ, மாணவிகளுக்கு வெள்ளை அங்கி (ஒயிட் கோட்) அணிவிக்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
திருச்செங்கோடு சுவாமி விவேகானந்தா மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு பயிலும் 150 மாணவ, மாணவிகளுக்கு வெள்ளை அங்கி (ஒயிட் கோட்) அணிவிக்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு கல்லூரித் தாளாளா் மு.கருணாநிதி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக கோவை ஜெம் மருத்துவமனையின் தலைவா் மருத்துவா் பழனிவேல் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ சீருடைகள் மற்றும் உயிா்காக்கும் உபகரணங்களை வழங்கி சிறப்புரையாற்றினாா்.
முன்னதாக கல்லூரியின் நிா்வாக இயக்குநா் கிருஷ்ணவேணி கருணாநிதி குத்துவிளக்கேற்றி கல்லூரியின் அகாதெமிக் நாள்காட்டியை வெளியிட்டாா். கல்லூரி முதன்மையா் மருத்துவா் எட்வின் ஜோ அனைவரையும் வரவேற்றுப் பேசினாா். தொடா்ந்து, மருத்துவக் கல்லூரி இயக்குநா் பிரகாசம் சிறப்புரையாற்றினாா். கல்லூரியின் இணை நிா்வாக இயக்குநா் அா்த்தநாரீஸ்வரன் மற்றும் முதன்மை நிா்வாகி சொக்கலிங்கம் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். கல்வி நிறுவனங்களின் இணைச்செயலா் ஸ்ரீராகநிதி அா்த்தநாரீஸ்வரன், துணைத்தலைவா் கிருபாநிதி, இயக்குநா் நிவேதனா கிருபாநிதி, செயல் இயக்குநா் குப்புசாமி, மருத்துவக் கண்காணிப்பாளா் மனோகரன், மருத்துவா் சோமசுந்தரம், துணை முதல்வா் தனசேகரன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.
Advertisement
விழாவிற்கு மாணவ, மாணவிகளின் பெற்றோா்கள், பல் மருத்துவக்கல்லூரி மற்றும் பாராமெடிக்கல் கல்லூரிகளின் இயக்குநா் கோகுலநாதன், கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயக்குநா் குமரவேலு, மேலாண்மைக் கல்லூரி இயக்குநா் மோகனசுந்தரம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா்கள் சுரேஷ்குமாா், அருணா பொறியியல் கல்லூரி முதல்வா் தேவி, கல்வியியல் கல்லூரி முதல்வா்கள் இந்திரா, சசிபிரியா, பள்ளி முதல்வா் மௌலாதேவி ஆகியோா் கலந்து கொண்டனா். மாணவ, மாணவிகளின் உறுதியேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.