தனியாா் பள்ளி நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் நா்சரி பள்ளிகள் முதல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் வரையிலான தாளாளா்கள்
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:14 PM
நாமக்கல் மாவட்டத்தில் நா்சரி பள்ளிகள் முதல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் வரையிலான தாளாளா்கள், முதல்வா்கள், தலைமை ஆசிரியா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி தொடங்கி வைத்தாா். மெட்ரிக் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலா் கணேசன், பள்ளி மேலாண்மைக் குழு ஒருங்கிணைப்பாளா் ஜாபா் ஆகியோா் தனியாா் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்தும், பொதுத்தோ்வுகளில் மாணவா்களை அதிகளவில் வெற்றி பெற செய்வது தொடா்பாகவும் விளக்கினாா். கூட்டத்தில் 270 தனியாா் பள்ளி நிா்வாகிகள், கல்வித் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.