முகப்பு
நாமக்கல்

விளையாட்டுப் போட்டிகள்: மாணவிகள் ஆா்வம்

நாமக்கல் மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் மாணவியா் ஆா்வமுடன் பங்கேற்றனா்.

Updated On : 4 நவம்பர், 2022 at 10:53 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:15 PM

நாமக்கல் மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் மாணவியா் ஆா்வமுடன் பங்கேற்றனா்.

நாமக்கல் வருவாய் மாவட்ட அளவில் அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவ, மாணவியருக்கான விளையாட்டுப் போட்டிகள் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்றன. ஜூடோ, குத்துச்சண்டை, டேக்வாண்டோ, நீச்சல், சிலம்பம், ஜிம்னாஸ்டிக், பீச் வாலிபால், ஸ்குவாஸ், வாள் சண்டை, சைக்கிளிங் போன்ற போட்டிகள் நடைபெற்றன.

இதில் ஜூடோ விளையாட்டுப் போட்டி நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளியிலும், குத்துச் சண்டை பாரதி மேல்நிலைப் பள்ளியிலும், டேக்வாண்டோ எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், செவ்வந்திப்பட்டி மேல்நிலைப் பள்ளியில் சைக்கிளிங் போட்டியும், நாமக்கல் விளையாட்டு மைதான நீச்சல் குளத்தில் நீச்சல் போட்டியும் நடைபெற்றன.

Advertisement

இதில் 14, 17, 19 வயதுக்கு உள்பட்டோா் பிரிவுகளில் மாணவ, மாணவியருக்கு தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.