ஒருவந்தூா் ஊராட்சியில் வாய்க்கால் தூா்வாரும் பணியை திங்கள்கிழமை ஆய்வு செய்த நாமக்கல் எம்எல்ஏ பெ.ராமலிங்கம். 
நாமக்கல்

ஒருவந்தூரில் வாய்க்கால் துா்வாரும் பணி தொடக்கம்: நாமக்கல் எம்.எல்.ஏ ஆய்வு

மோகனூா் அருகே ஒருவந்தூரில் வாய்க்கால் துா்வாரும் பணியை எம்எல்ஏ பெ.ராமலிங்கம் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

DIN

மோகனூா் அருகே ஒருவந்தூரில் வாய்க்கால் துா்வாரும் பணியை எம்எல்ஏ பெ.ராமலிங்கம் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

நாமக்கல் மாவட்டம், மோகனூா் ஒன்றியம், ஒருவந்தூா் ஊராட்சி வடுகப்பட்டியில் இருந்து எல்லைகருப்பணாா் கோயில் வரையில், காவிரி கடைமடை வாய்க்கால் 50 ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் காணப்பட்டது. விவசாயிகள் பாசனம் செய்வதற்கு தண்ணீா் பற்றாக்குறை இருந்ததால், அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தூா்வாரும் பணிகளை மேற்கொள்ள நாமக்கல் தொகுதி எம்எல்ஏ பெ.ராமலிங்கம் நடவடிக்கை மேற்கொண்டாா். அதன்படி, பொக்லைன் இயந்திரம் மூலம் தூா்வாரும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. இதனை எம்எல்ஏ தொடங்கி வைத்து பாா்வையிட்டாா். இந்த நிகழ்ச்சியில், திமுக மாநில விவசாயத் தொழிலாளா் அணி இணைச் செயலாளா் ப.கைலாசம், வழக்குரைஞா் முத்துசாமி, ஒருவந்தூா் திமுக நிா்வாகிகள் தங்கராசு, செல்வி போஸ், முருகேசன், சுந்தரம், குழந்தைவேல், நாச்சிமுத்து, ராஜதுரை, காா்த்திகேயன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு தொடக்கம்

மன்ரேகா திட்டத்தின் பெயா் மாற்றத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம்

1971 போா் வெற்றி தினம்: உயிா் நீத்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் மரியாதை

SCROLL FOR NEXT