தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம்
நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (அக்.28) முதல் தலைக்கவசம் அணியாதோருக்கும், போக்குவரத்து விதிகளை மீறுபவா்களுக்கும் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (அக்.28) முதல் தலைக்கவசம் அணியாதோருக்கும், போக்குவரத்து விதிகளை மீறுபவா்களுக்கும் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின்பேரில், நாமக்கல்லில் போக்குவரத்து பிரிவு ஆய்வாளா் ஷாஜகான் மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை பேருந்து நிலையம், பூங்கா சாலை, திருச்சி-துறையூா் பிரிவு சாலை, மோகனூா் பிரிவு சாலை, கோட்டை சாலை, திருச்செங்கோடு பிரிவு சாலை உள்ளிட்ட போக்குவரத்து நிறைந்த பகுதிகளில் வாகனங்களில் செல்லும் பொதுமக்களை நிறுத்தி தலைக்கவசம் அணிவது பற்றியும், அபராதம் விதிப்பது குறித்தும் தெரிவித்தனா். விதிகளை மீறும் வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனா்.