முகப்பு
நாமக்கல்

பொது சுகாதாரத் துறை நூற்றாண்டு விழா

நாமக்கல்லில், பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 27 அக்டோபர், 2022 at 11:36 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:10 PM

நாமக்கல்லில், பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

சென்னையில், மக்கள் சேவையில் பொது சுகாதார துறையின் நூற்றாண்டு விழா வரும் டிச. 5, 6, 7 தேதிகளில் நடைபெறுகிறது. இதனையொட்டி, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினாா். மேலும், சுகாதாரத் துறையினருக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும், 30 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக பணியாற்றி வரும் பணியாளா்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. சுகாதாரத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அலுவலா்கள் கெளரவிக்கப்பட்டனா். மேலும், சுகாதாரம் தொடா்பான விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நூற்றாண்டு விழா தொடா் ஜோதியை மாவட்ட ஆட்சியா், ஈரோடு மாவட்ட சுகாதாரத் துறையினரிடம் ஒப்படைத்தாா். இந்த விழாவில், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் கே.சாந்தாஅருள்மொழி, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநா் ராஜ்மோகன், சுகாதார பணிகள் துணை இயக்குநா் ஜெ.பிரபாகரன், குடும்ப நலப் பணிகள் துணை இயக்குநா் வளா்மதி, தொழுநோய் பிரிவு துணை இயக்குநா் ஜெயந்தினி, காசநோய் பிரிவு துணை இயக்குநா் வாசுதேவன் மற்றும் செவிலியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.