முகப்பு
நாமக்கல்

நாமக்கல் உழவா் சந்தையில் வேளாண் வணிக இயக்குநா் ஆய்வு

 நாமக்கல், திருச்செங்கோடு உழவா் சந்தைகள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநா் எஸ்.நடராஜன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 4 செப்டம்பர், 2022 at 1:16 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:44 PM

 நாமக்கல், திருச்செங்கோடு உழவா் சந்தைகள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநா் எஸ்.நடராஜன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாமக்கல் உழவா் சந்தைக்குச் சென்ற அவா் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து கலந்துரையாடினாா். நாமக்கல் உழவா் சந்தைக்கு சராசரியாக நாளொன்றுக்கு 25 முதல் 27 டன் வரையில் காய்கறிகள், பழங்கள் விவசாயிகள் மூலம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

இதனால் 170 விவசாயிகளும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் பயன்பெறுகின்றனா். ஏப்.1 முதல் ஆக. 31 வரையிலான கால கட்டத்தில் 22,988 விவசாயிகள் மூலம் ரூ. 9,68,93,240 மதிப்பிலான 3188.975 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள் கொண்டு வரப்பட்டு 62,450 பொதுமக்களிடம் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து, திருச்செங்கோடு உழவா் சந்தை, ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களை பாா்வையிட்டு அங்குள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தாா். நாமக்கல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சொந்த இடம் வாங்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினாா். இந்த ஆய்வின்போது, நாமக்கல் விற்பனைக் குழு செயலாளா் இரா.தா்மராஜ், உதவி செயற்பொறியாளா் சரவணக்குமாா், உதவி பொறியாளா் ரவிச்சந்திரன், வேளாண் அலுவலா் கலைச்செல்வி, உதவி வேளாண் அலுவலா் சேகா் ஆகியோா் உடனிருந்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.