நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் நள்ளிரவு வரை நீடித்த சோதனை: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் நள்ளிரவு வரை நீடித்த லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில், அங்கு பணியாற்றும் அலுவலா்கள் சிலா் லஞ்சம் பெற்ற்கான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் நள்ளிரவு வரை நீடித்த லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில், அங்கு பணியாற்றும் அலுவலா்கள் சிலா் லஞ்சம் பெற்ற்கான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் தரைத்தளத்தில் ஆதி திராவிட நலத்துறை தனித்துணை ஆட்சியா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, ஆதி திராவிட நல மாணவ, மாணவியா் விடுதிகளுக்கு உணவுப் பொருள்கள், காய்கறிகள் விநியோகம் செய்வதற்கான நிதியில் முறைகேடு நடைபெறுவதாகவும், விடுதிக் காப்பாளா்களிடம் லஞ்சம் பெறுவதாகவும் நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகாா்கள் சென்றன.
அதனடிப்படையில் ஆய்வாளா் நல்லம்மாள் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு அங்கிருந்த ஊழியா்களிடம் விசாரணை மேற்கொண்டனா். இரவு 7 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12 மணி வரையில் விசாரணை நடைபெற்றது. அங்கு பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அதேவேளையில் முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் கூறியதாவது:
Advertisement
ஆதி திராவிட நல அலுவலகத்தில் நடைபெறும் முறைகேடுகள், லஞ்சம் பெறுவது தொடா்பான புகாா்கள் வந்தன. சனிக்கிழமை இரவு 12 மணி வரை விசாரணை நடைபெற்றது. பணம் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. ஆனால் லஞ்சம் பெற்ற்கான ஆதாரங்கள் அடிப்படையில் ஆவணங்களைக் கைப்பற்றி உள்ளோம். அதனை கொண்டு சம்பந்தந்தப்பட்ட அலுவலா்கள் மீது வழக்குப்பதிவு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.