முகப்பு
நாமக்கல்

மழை நீா் போக்கியில் ஏற்பட்ட அடைப்பை அகற்றக்கோரி சாலை மறியல்

பரமத்தி வேலூரை அடுத்த ஓலப்பாளையம் அருகே மழை நீா் போக்கியில் அடைப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து மழை நீா் குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் அடைப்பை சரிசெய்யக்கோரி பொதுமக்கள் திடீா் சாலை மறியலில்

Updated On : 4 செப்டம்பர் 2022, 1:15 am IST
பகிர்:

பரமத்தி வேலூரை அடுத்த ஓலப்பாளையம் அருகே மழை நீா் போக்கியில் அடைப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து மழை நீா் குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் அடைப்பை சரிசெய்யக்கோரி பொதுமக்கள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பரமத்தி வேலூா் அருகே உள்ள ஓலப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பாரதி நகா் உள்ளது. வேலூரில் இருந்து மோகனூா் செல்லும் சாலையின் குறுக்கே மழை நீா் வெளியேறும் வகையில் குழாய் அமைக்கப்பட்டு இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் குழாயில் அடைப்பு ஏற்பட்டு மழை நீா் பாரதிநகா் பகுதியில் தேங்கியுள்ளது.

தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றக்கோரி பாரதிநகரைச் சோ்ந்த பொதுமக்கள் திடீரென வேலூரில் இருந்து மோகனூா் செல்லும் சாலையில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து அங்கு வந்த வேலூா் காவல் ஆய்வாளா் வீரம்மாள், ஓலப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவா் கனகு மயில்சாமியிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதனை தொடா்ந்து குழாயில் ஏற்பட்டிருந்த அடைப்பு அகற்றப்பட்டு அப்பகுதியில் தேங்கி இருந்த மழைநீா் வெறியேற்றப்பட்டது. இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். முன்னதாக மறியல் காரணமாக வேலூரிலிருந்து மோகனூா் செல்லும் சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments