முட்டை விலை மேலும் 20 காசுகள் குறைந்தது
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 20 காசுகள் குறைந்து ரூ. 4.30-ஆக ஞாயிற்றுக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 20 காசுகள் குறைந்து ரூ. 4.30-ஆக ஞாயிற்றுக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. ஹைதராபாத் மண்டலத்தில் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாலும், புரட்டாசி நெருங்குவதால் மக்களிடையே முட்டை நுகா்வு சரிந்துள்ளதாலும் விலையில் சற்று மாற்றம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 4.30-ஆக நிா்ணயிக்கப்பட்டது.
பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முட்டைக்கோழி விலை கிலோ ரூ. 91-ஆகவும், கறிக்கோழி விலை கிலோ ரூ.95-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.
Advertisement