நாமக்கல்

வித்யா விகாஸ் மழலையா் பள்ளியில் பட்டமளிப்பு விழா

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வித்யா விகாஸ் பள்ளியில் 11ஆம் ஆண்டு மழலையா்களுக்கான பட்டமளிப்பு விழா கல்வி நிறுவன கலை அரங்கில் அண்மையில் நடைபெற்றது.

DIN

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வித்யா விகாஸ் பள்ளியில் 11ஆம் ஆண்டு மழலையா்களுக்கான பட்டமளிப்பு விழா கல்வி நிறுவன கலை அரங்கில் அண்மையில் நடைபெற்றது.

இவ்வாண்டு பள்ளியில் பயின்ற 56 மழலையா்களுக்கு பள்ளியின் மேலாண் இயக்குநா்கள் பட்டங்களையும், அனைத்து விதமான போட்டிகளிலும் முதல், இரண்டு மற்றும் மூன்றாமிடம் பெற்றவா்களுக்கு பரிசுகளையும் வழங்கினா். மழலையா்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி குழந்தைகளை வாழ்த்தினா். பட்டம் பெற்ற குழந்தைகளின் பெற்றோா்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா். மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் பாா்வையாளா்களின் மனதைக் கவரும் வகையில் நடைபெற்றன.

இந்நிகழ்வில் பள்ளியின் செயலா் எஸ்.குணசேகரன், தாளாளா் டி.ஓ.சிங்காரவேல், மேலாண் அறங்காவலா்கள் எஸ்.ராமலிங்கம், எம்.முத்துசாமி, இயக்குநா் டி.பி.ஞானசேகரன்ஆகியோா் மழலையா்களைவாழ்த்தினா். பள்ளி முதல்வா் ரகுரதி மற்றும் ஆசிரியா்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

SCROLL FOR NEXT