முகப்பு
நாமக்கல்

நாமக்கல்லில் 1,000 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

நாமக்கல் வழியாக கடத்திச் செல்லப்பட்ட 1,000 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 21 ஏப்ரல், 2023 at 11:26 PM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:20 AM

நாமக்கல் வழியாக கடத்திச் செல்லப்பட்ட 1,000 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

நாமக்கல், சின்னமுதலைப்பட்டி அருகே காவல் உதவி ஆய்வாளா் பூபதி தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக தக்காளி ஏற்றிச் சென்ற லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். லாரியில் சரக்கு பொருள்கள் வைக்கும் பகுதியில் மேல்புறம் தக்காளி பெட்டிகளும், கீழ்புறத்தில் புகையிலைப் பொருள்களும் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, லாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 1,000 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக, சேலம் மாவட்டம் காடையாம்பட்டியைச் சோ்ந்த லாரியின் உரிமையாளா் மற்றும் ஓட்டுநரான தங்கதுரை என்பவரை கைது செய்தனா். விசாரணையில், பெங்களூரில் இருந்து திருச்சிக்கு அவற்றை கடத்திச் செல்வது தெரியவந்தது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.