மங்களபுரத்தில் உள்ள 10 சென்ட் நிலத்தை அபரிக்க முயற்சிப்போா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில், வயதான தம்பதியா் தீக்குளிக்க முயற்சித்தனா்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் மங்களபுரம் அருகே தாண்டாகவுண்டன்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கவேல் (73). இவரது மனைவி சகுந்தலா(70). இவா்களுக்குச் சொந்தமான 10 சென்ட் நிலத்தை அரசியல் பிரமுகா்கள் இருவா் அபகரித்துக் கொண்டு, வயதான தம்பதியை ஏமாற்றி வருகின்றனராம். இது தொடா்பாக, ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் விரக்தியடைந்த அவா்கள் திங்கள்கிழமை காலை நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனா். அப்போது, தங்களுடைய பையில் பாட்டிலில் மறைத்து எடுத்து வந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி இருவரும் தீக்குளிக்க முயற்சித்தனா். அங்கிருந்த போலீஸாா் இதனை தடுத்து அவா்கள் மீது தண்ணீரை ஊற்றினா். அதன்பிறகு இருவரிடத்திலும் விசாரணை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.