முகப்பு
நாமக்கல்

பக்ரீத் பண்டிகை: நாமக்கல் ஈத்கா மைதானத்தில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகையையொட்டி, நாமக்கல் ஈத்கா மைதானத்தில் இஸ்லாமியர்கள் வியாழக்கிழமை சிறப்புத் தொழுகை மேற்கொண்டனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:14 PM
நாமக்கல் ஈத்கா மைதானத்தில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்.
பகிர்:

நாமக்கல்: பக்ரீத் பண்டிகையையொட்டி, நாமக்கல் ஈத்கா மைதானத்தில் இஸ்லாமியர்கள் வியாழக்கிழமை சிறப்புத் தொழுகை மேற்கொண்டனர்.

தியாகத் திருநாள் என்று அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. 

இதனையொட்டி, நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் இஸ்லாமியர்கள் காலை 8 மணி அளவில் சிறப்புத் தொழுகை மேற்கொண்டனர். 

இதனைத் தொடர்ந்து ஒருவருக்கொருவர் கட்டியணைத்து பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். மேலும், ஆங்காங்கே ஏழைகளுக்கு குர்பானி கொடுக்கும் நிகழ்வுகளும் நடைபெற்றன.

முழு கட்டுரையைப் படிக்க →