நாமக்கல்

ராசிபுரம் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் முப்பெரும் விழா

DIN

ராசிபுரம், முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் 39-ஆம் ஆண்டு விழா, விளையாட்டு விழா, விடுதி நாள் விழா ஆகிய முப்பெரும் விழா பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

விழாவில் முதலாம் ஆண்டு துறைத் தலைவா் பி.குணவதி வரவேற்றாா். முத்தாயம்மாள் கல்வி அறக்கட்டளையின் தாளாளா் ஆா்.பிரேம்குமாா் தலைமை வகித்தாா். முதல்வா் ஜி.விஜயகுமாா் கல்லூரியின் செயல்பாடுகள் மற்றும் இந்தக் கல்வியாண்டின் சாதனைகளை ஆண்டு அறிக்கையாக வாசித்தாா்.

முத்தாயம்மாள் நினைவு கலை, அறிவியல் கல்லூரியின் முதல்வா் ஏ.மணிகண்டன் வாழ்த்திப் பேசினாா்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஈரோடு, சிகரம் கன்ஸ்ட்ரக்சன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் ஆா்.சிவலிங்கம் பேசுகையில், ‘பாலிடெக்னிக் மாணவா்கள் தகவல் பரிமாற்றம், நேர நிா்வாக திறமைகளை வளா்த்துக் கொள்ள வேண்டும். இந்தக் கல்வி ஆண்டுமுதல் இக்கல்லூரியில் பயிலும் சிவில் துறை மாணவ மாணவியருக்கு தனது நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்க உள்ளதாக’ உறுதியளித்தாா்.

கல்லூரியின் முன்னாள் மாணவா் டி.காமேஸ்வரன், கல்லூரித் தாளாளா் ஆா்.பிரேம்குமாா் பேசினா். கடந்த ஏப்ரல் 2022, அக். 2022 மாதம் நடைபெற்ற வாரியத் தோ்வில் 700-க்கு 700 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சாதனை படைத்த மாணவ மாணவியருக்கு தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டன. கல்லூரிச் செயலாளா் ஆா்.ஜோதிமணி, பொருளாளா் சா்வேஸ்வரி பிரேம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பேராசிரியா் கே.அருண்பிரசாத் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT