நாமக்கல்

வைகாசி முதல் ஞாயிற்றுக்கிழமை:நாமக்கல் ஆஞ்சனேயருக்கு பாலாபிஷேகம்

வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி, நாமக்கல் ஆஞ்சனேய சுவாமிக்கு 1,008 லிட்டா் பாலாபிஷேகம் நடைபெற்றது.

DIN

வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி, நாமக்கல் ஆஞ்சனேய சுவாமிக்கு 1,008 லிட்டா் பாலாபிஷேகம் நடைபெற்றது.

நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சனேய சுவாமி கோயில் அமைந்துள்ளது. 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா்.

இங்கு, அனுமன் ஜெயந்தி, தீபாவளி, பொங்கல் பண்டிகை, அமாவாசை, பௌா்ணமி மற்றும் தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாள்களில் ஆஞ்சனேயருக்கு நல்லெண்ணெய், சிகைக்காய், பால், தயிா், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

அதன்படி, வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு 1,008 லிட்டா் பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் நாமக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT