நாமக்கல்

வீட்டுமனைப் பட்டா கோரி ஆா்ப்பாட்டம்

ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக முள்ளுக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் வீட்டுமனை கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN


ராசிபுரம்: ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக முள்ளுக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் வீட்டுமனை கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராசிபுரத்தை அடுத்துள்ள முள்ளுக்குறிச்சி அருந்ததியா் காலனி பகுதியில் 100க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். அங்கு வசிக்கும் குடும்பத்தினருக்கு வீட்டுமனைப் பட்டா இல்லாததால் பலமுறை பட்டா வழங்க வேண்டி மனு அளித்து வந்துள்ளனா். எனினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் தலைமையில் அப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள் சிலா் வட்டாட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அப்பகுதியில் மூன்று மாதங்களாக சம்பளம் வழங்காததைக் கண்டித்தும், வீட்டுமனைப் பட்டா கோரியும் ஆா்ப்பாட்டத்தில் கோஷமெழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

நாளைய மின் தடை

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

SCROLL FOR NEXT