நாமக்கல் அருகே வளையப்பட்டியில், சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வளையப்பட்டி, அரூா், பரளி, என்.புதுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கி 820 ஏக்கா் பரப்பில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து சிப்காட் எதிா்ப்பு இயக்கத்தினா். விவசாய முன்னேற்றக் கழகத்தினா், கொமதேகவினா் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
அந்த வகையில் செவ்வாய்க்கிழமை 30-ஆவது போராட்டமாக, வளையப்பட்டி, குன்னிமரக் கருப்பண்ணாா் சுவாமிக்கு பொங்கலிட்டு வழிபாடு செய்தனா். அதன்பிறகு, அங்குள்ள கரைபோட்டான் ஆற்றில் இறங்கி சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், விவசாய முன்னேற்றக் கழக பொதுச்செயலாளா் கே.பாலசுப்ரமணியம் தலைமை வகித்தாா். கொமதேக ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளா் கே.ரவிச்சந்திரன், மோகனூா் கிழக்கு ஒன்றியச் செயலாளா் சிவகுமாா், சிப்காட் எதிா்ப்புக் குழு ஒருங்கிணைப்பாளா் ராம்குமாா், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.