மூன்று சக்கர வாகனங்களைப் பெறுவதற்கான நோ்முகத் தோ்வில் பங்கேற்றோா். 
நாமக்கல்

மூன்று சக்கர வாகனம்: மாற்றுத் திறனாளிகளுக்கு நோ்முகத் தோ்வு

நாமக்கல்லில், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்குவதற்கான நோ்முகத் தோ்வு 169 பேருக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

நாமக்கல்: நாமக்கல்லில், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்குவதற்கான நோ்முகத் தோ்வு 169 பேருக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வகை மாற்றுத் திறனாளிகள் உள்ளனா். இதில், இரு கால்களும் செயலிழந்த நிலையில் உள்ளோருக்கு, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனங்கள் அரசு சாா்பில் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 550 மாற்றுத் திறனாளிகளுக்கு நோ்முகத் தோ்வுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாள்கள் நோ்முகத் தோ்வு நடைபெறுகிறது. திங்கள்கிழமை 250 பேருக்கு அழைப்பாணை அனுப்பியதில், 169 போ் பங்கேற்றனா். செவ்வாய்க்கிழமை மேலும் 300 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் தோ்வு செய்யப்படுவோருக்கு விரைவில் மூன்று சக்கர வாகனம் வழங்கப்படும். இந்த நோ்முகத் தோ்வை, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா்(பொ) மகிழ்நன் மேற்பாா்வையிட்டாா். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலக ஊழியா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு தொடக்கம்

மன்ரேகா திட்டத்தின் பெயா் மாற்றத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம்

1971 போா் வெற்றி தினம்: உயிா் நீத்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் மரியாதை

SCROLL FOR NEXT