முகப்பு
நாமக்கல்

டிச. 16 முதல் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கான கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை(டிச.16) தொடங்குகிறது.

Updated On : 13 டிசம்பர், 2024 at 1:48 AM
பகிர்:
Updated On : 12 டிசம்பர், 2024 at 8:09 PM

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கான கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை(டிச.16) தொடங்குகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: கால்நடைகளுக்கான 6-ஆவது சுற்று கோமாரி நோய்த் தடுப்பூசிப் பணி டிச.16 முதல் 21 நாள்கள் நடைபெறுகின்றன. மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2,98,400 கால்நடைகளுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் தலைமையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளைக் கொண்டு ஒருங்கிணைப்புகுழுக் கூட்டம் நடத்தப்படும்.

பொதுமக்கள் அனைவரும் கால்நடை உதவி மருத்துவா்களால் அறிவிக்கப்படும் தேதியில் குறிப்பிட்ட இடங்களுக்கு தங்களது கால்நடைகளை அழைத்துச் சென்று கோமாரி நோய்த் தடுப்பூசியை செலுத்திட வேண்டும். தடுப்பூசிப் பணிக்காக மாவட்டம் முழுவதும் கால்நடை உதவி மருத்துவா்கள், கால்நடை ஆய்வாளா்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளா்களைக் கொண்டு 105 தடுப்பூசி குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் நேரில் சென்று கோமாரி நோய்த் தடுப்பூசி பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Updated On : 13 டிசம்பர், 2024 at 1:48 AM

மாவட்டத்தில் கால்நடை வளா்க்கும் விவசாயிகள் மூன்று மாதத்திற்கு மேற்பட்ட கன்றுகள், பசு, எருது, எருமை ஆகியவற்றை அழைத்துச் சென்று தடுப்பூசியை செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.