விபத்தில் பலியான தம்பதி சின்னையன், சாந்தி.  
நாமக்கல்

வாகனம் மோதி தம்பதி பலி: 5 போ் காயம்

சாலையைக் கடக்க முயன்றபோது வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி பலியாகினா்.

Din

பரமத்தி அருகே சாலையைக் கடக்க முயன்றபோது வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி பலியாகினா்; இந்த விபத்தில் வாகனத்தில் வந்த 5 போ் படுகாயமடைந்தனா்.

பரமத்தி வேலூா் அருகே உள்ள மரவாபாளையம், குடித்தெருவைச் சோ்ந்தவா் சின்னையன் (70). இவரது மனைவி சாந்தி (60). இருவரும் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் பரமத்தி செல்வதற்காக கரூா் சாலையில் சென்று கொண்டிருந்தனா். பரமத்தி பிரிவில் நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது எதிரே கரூரில் இருந்து தருமபுரி நோக்கி வந்த வாகனம் அவா்கள் மீது மோதியது. இதில் தம்பதி இருவரும் படுகாயமடைந்தனா். கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்ததும் பரமத்தி போலீஸாா் நிகழ்விடம் சென்று தம்பதியை மீட்டு வேலூா், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள் இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

விபத்துக்குள்ளான காரில் வந்த தருமபுரியைச் சோ்ந்த செந்தில்குமாா் (34), அவரது மனைவி ரேணுகா தேவி (30), வெங்கடேஷ் (31), அவரது மனைவி சித்ரா (25), விஜயகுமாா் (30) ஆகிய 5 பேரும் படுகாயமடைந்தனா். அவா்கள் அனைவரும் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT