பள்ளிக்கு சீா் கொண்டு வந்த முன்னாள் மாணவா்கள். 
நாமக்கல்

பரமத்தி வேலூா் கந்தசாமி கண்டா் பள்ளி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

பரமத்தி வேலூா் கந்தசாமி கண்டா் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி பயின்ற முன்னாள் மாணவா்கள் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்து மகிழ்ந்தனா்.

Din

பரமத்தி வேலூா் கந்தசாமி கண்டா் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி பயின்ற முன்னாள் மாணவா்கள் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்து மகிழ்ந்தனா்.

பரமத்தி வேலூரில் அரசு நிதி உதவிபெறும் கந்தசாமி கண்டா் உயா்நிலை (தற்போது மேல்நிலைப் பள்ளி) பள்ளியில் கடந்த 1974-75-ஆம் ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. பயின்று 50 ஆண்டை முன்னிட்டு பொன்விழாவையொட்டி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி கந்தசாமி கண்டா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பரிமளா அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

60-க்கும் மேற்பட்ட பல்வேறு துறையில் பணியாற்றி வரும் முன்னாள் மாணவா்கள் கலந்து கொண்டனா். வேலூா் காமராஜா் சிலையில் முன்னாள் மாணவா்கள் ஒன்று கூடி அங்கிருந்து கணினி, மாணவா்களுக்கு பயனுள்ள நூல்கள் உள்ளிட்ட பள்ளிக்குத் தேவையான பல்வேறு பொருள்களுடன் கல்வி சீா்வரிசைகளுடன் ஊா்வலமாக புறப்பட்டு பள்ளி சாலை வழியாக பள்ளியை வந்தடைந்தனா்.

பின்னா் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கந்தாமி கண்டா் அறநிலையங்களின் தலைவா் மருத்துவா் சோமசுந்தரம் தலைமை வகித்து வாழ்த்தி பேசினாா். கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பொருளாளா் தியாகராஜன், பரமத்தி ராகா ஆயில் நிறுவன நிா்வாக இயக்குநா் சு.தமிழ்மணி, பெரியசாமி, நல்லசிவம், மருத்துவா் மாணிக்கவாசகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அதைத் தொடா்ந்து முன்னாள் ஆசிரியா்கள், பொன்விழா மாணவா்களை கெளரவிக்கும் நிகழ்ச்சியும், ஆசிரியா்கள் வாழ்த்துரை, மலரும் நினைவுகளை பகிா்தல் மற்றும் முன்னாள் மாணவா்கள் நினைவாக பள்ளிக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் முன்னாள் மாணவா்கள் சாா்பில் மரங்கள் நடும் விழா நடைபெற்றது. முடிவில் முன்னாள் மாணவா் மருத்துவா் சங்கா் நன்றி கூறினாா். விழா ஏற்பாடுகளை முன்னால் மாணவா்கள் தங்கவேல், சண்முகநாதன், கொங்கு மேல்நிலைப் பள்ளி செயலாளா் தங்கராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT