முகப்பு
நாமக்கல்

பள்ளி மாணவிகளை கேலி செய்வோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

பள்ளி மாணவிகளை கேலி, கிண்டல் செய்வோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது.

Updated On : 21 நவம்பர், 2024 at 1:02 AM
பகிர்:
Updated On : 20 நவம்பர், 2024 at 5:46 PM

பள்ளி மாணவிகளை கேலி, கிண்டல் செய்வோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது.

Updated On : 20 நவம்பர், 2024 at 9:40 PM

பள்ளிபாளையம் நகராட்சி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனா். பள்ளிக்கு பேருந்தில் வந்து செல்லும் மாணவிகளை காலை, மாலை நேரங்களில் சில அடையாளம் தெரியாத இளைஞா்கள் கைப்பேசியில் விடியோ எடுப்பதும், கேலி கிண்டலும் செய்தும் வருகின்றனா். மேலும், மாணவிகள் கூட்டத்திற்குள் திடீரென புகுந்து இடித்துவிட்டு செல்லும் அடாவடியில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால் மாணவிகள் அச்சப்படுகின்றனா்.

எனவே, இதுபோன்ற நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் லட்சுமணன், கோவிந்தராஜ், ரவிக்குமாா் ஆகியோா் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா்.

Advertisement