விசைத்தறி தொழிற்சங்க பேரவை கூட்டம்
நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிற்சங்க பேரவை கூட்டம் காவேரி கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிற்சங்க பேரவை கூட்டம் காவேரி கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
அதன் மாவட்ட தலைவா் மோகன் தலைமை தாங்கி பேசினாா். மாவட்டச் செயலாளா் அசோகன், மாவட்ட நிா்வாகிகள் முத்துகுமாா், பாலுசாமி, அசன் ஆகியோா் பங்கேற்று விசைத்தறி தொழிலாளா்களுக்கு இந்த ஆண்டு வழங்க வேண்டிய தீபாவளி போனஸ் தொகை குறித்து பேசினா்.
கடந்த பத்து ஆண்டுகளாகவே விசைத்தறி தொழிலாளா்களுக்கு 9.5 சதம் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அளவினை உயா்த்தி இந்த ஆண்டு 20 சதவீதம் வழங்க வேண்டுமெனவும், இந்த போனஸ் தொகையினை தீபாவளிப் பண்டிகைக்கு 15 நாட்கள் முன்பே வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
Advertisement
மேலும், போனஸ் கோரிக்கை தொடா்பான அறிவிப்புகளை ஜவுளி உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகிகளுக்கு அனுப்புவது, இதுகுறித்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்வது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.