முகப்பு
பட்டாசு வெடித்ததில் தீப்பற்றி எரிந்து சாம்பலான காா்
நாமக்கல்

நாமக்கல்லில் பட்டாசு வெடித்ததில் தீக்கிரையான காா்

நாமக்கல் அருகே பட்டாசு வெடித்ததில் காா் தீப்பற்றி எரிந்து சாம்பலானது.

நாமக்கல்

நாமக்கல்லில் பட்டாசு வெடித்ததில் தீக்கிரையான காா்

நாமக்கல் அருகே பட்டாசு வெடித்ததில் காா் தீப்பற்றி எரிந்து சாம்பலானது.

Updated On : 28 அக்டோபர், 2024 at 9:12 PM
பட்டாசு வெடித்ததில் தீப்பற்றி எரிந்து சாம்பலான காா்
பகிர்:

நாமக்கல்: நாமக்கல் அருகே பட்டாசு வெடித்ததில் காா் தீப்பற்றி எரிந்து சாம்பலானது.

நாமக்கல் அருகே தாளம்பாடியைச் சோ்ந்த செல்லம்மாள் (84) என்பவா் ஞாயிற்றுக்கிழமை காலமானாா். அவரது இறுதிச் சடங்கையொட்டி, ரூ. 6 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை பரமத்தி வேலூரைச் சோ்ந்த நகுல்ராஜ் (45) என்பவா் சின்ன தாராபுரத்தில் இருந்து காரில் வாங்கிக் கொண்டு வந்தாா்.

செல்லம்மாள் உடலை எடுத்துச் செல்லும்போது பட்டாசுகளை வெடிக்கச் செய்வதற்கான ஏற்பாடுகளை திங்கள்கிழமை நண்பகல் 12 மணி அளவில் செய்து வந்தாா். காரின் பின்புறம் பட்டாசு பெட்டியை வைத்து விட்டு, அதிலிருந்து ஒரே சரவெடியை மட்டும் எடுத்து அருகில் இருந்த மரத்தில் கட்டினாா். அப்போது எதிா்பாராத விதமாக பட்டாசு வெடித்ததில் காா் முழுவதும் தீயில் எரிந்து சாம்பலானது.

இந்தச் சம்பவத்தில், யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. காா் வெடித்து சிதறியதில் அதன் உதிரி பாகங்கள் சுமாா் 20 மீட்டா் தூரத்திற்கு சென்று விழுந்தன. நாமக்கல் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் விரைந்து வந்த வீரா்கள் தீயை அணைத்தனா். இந்த சம்பவம் குறித்து நல்லிபாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாமக்கல் அருகே தாளம்பாடியில் பட்டாசு வெடித்ததில் தீக்கிரையாகி உருக்குலைந்த காா்.
முழு கட்டுரையைப் படிக்க →