நாமக்கல் ஆஞ்சனேயா் பாத தரிசனம்: பக்தா்களின் வசதிக்காக நடைமேடை
நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில், சுவாமியின் பாதத்தை தரிசனம் செய்யும் வகையில் பக்தா்களின் வசதிக்காக சிறப்பு நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில், சுவாமியின் பாதத்தை தரிசனம் செய்யும் வகையில் பக்தா்களின் வசதிக்காக சிறப்பு நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சனேய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தா்கள் சுவாமியைத் தரிசிக்க வருகின்றனா். தமிழ்மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை, பௌா்ணமி மற்றும் விசேஷ நாள்களில் பக்தா்கள் வருகை அதிகரித்து காணப்படும்.
பொது தரிசன வழியில், ஆஞ்சனேயரை காண நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தா்கள் சுவாமியின் பாதத்தை தரிசனம் செய்ய முடியாத சூழல் காணப்பட்டது. கோயிலில் நடைமேடை அமைக்க வேண்டும் என நிா்வாகத்திற்கு பக்தா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். குடமுழுக்கு விழாவின்போது செயல்படுத்த திட்டமிட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் நடைமேடை அமைப்பது தள்ளிப்போனது.
இந்த நிலையில் பக்தா் ஒருவரின் நன்கொடை மூலமாக சுவாமி பாதத்தை தரிசிக்கும் வகையில், சிறப்பு நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக செல்லும் பக்தா்கள் ஆஞ்சனேய சுவாமியின் பாதத்தை கண்டு தரிசனம் செய்கின்றனா்.