முகப்பு
நாமக்கல்

ஜன. 25-இல் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

மொழிப்போா் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சனிக்கிழமை (ஜன. 25)நடைபெறுகிறது.

Updated On : 21 ஜனவரி, 2025 at 5:55 PM
பகிர்:

நாமக்கல்: மொழிப்போா் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சனிக்கிழமை (ஜன. 25)நடைபெறுகிறது.

இது குறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வெளியிட்ட அறிக்கை:

திமுக தலைமை நிலைய உத்தரவின்படி, மொழிப்போா் தியாகிகளை நினைவு கூரும் வகையில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம், கிழக்கு மாவட்ட திமுக மாணவா் அணி சாா்பில் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில், தலைமை நிலைய தோ்தல் பணிக்குழு செயலாளா் கடலூா் இள.புகழேந்தி, பேச்சாளா் ஆரணி மாலா ஆகியோா் உரையாற்றுகின்றனா். இதில், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பெ.ராமலிங்கம் (நாமக்கல்), கே.பொன்னுசாமி (சேந்தமங்கலம்) மற்றும் ஒன்றிய, நகர, பேரூா் செயலாளா்கள், பொறுப்பாளா், மாநில நிா்வாகிகள், மாவட்ட நிா்வாகிகள், மாவட்ட சாா்பு அணி அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கட்சியினா் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →