கள்ளுக்கான தடையை நீக்கக் கோரி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள். 
நாமக்கல்

கள்ளுக்கான தடையை நீக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

அரசு மதுக்கடைகளை மூட வேண்டும், கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம்

Din

நாமக்கல்: அரசு மதுக்கடைகளை மூட வேண்டும், கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தலைமை வகித்தாா். உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ரா. வேலுசாமி, விவசாயம் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளா் கே. பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கள்ளை உணவுப் பொருளாக ஏற்று, அதற்கான தடையை நீக்க வேண்டும். அரசு மதுக்கடைகள் அனைத்தையும் மூட வேண்டும். கள், நீரா, பதநீா் ஆகியவற்றை மதிப்புக் கூட்டப்பட்ட பண்டங்களாக மாற்றி, நாடு முழுவதும் சந்தைப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

2011 இல் கலைக்கப்பட்ட தென்னை விவசாயிகள் நல வாரியத்தை புதுப்பிக்க வேண்டும். விவசாயத்தை பாதிக்கும் சிப்காட் தொழிற்பேட்டைகளை அமைக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனா்.

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

SCROLL FOR NEXT