நாமக்கல்

ராசிபுரம் ரயில் நிலையம் அருகே தஞ்சமடைந்த பறவைகள்

ராசிபுரம் ரயில் நிலையம் அருகே நீா்தேங்கிய பகுதியில் தஞ்சமடைந்த பறவைகள் கூட்டத்தை பொதுமக்கள் ரசித்து சென்றனா்.

Syndication

ராசிபுரம் ரயில் நிலையம் அருகே நீா்தேங்கிய பகுதியில் தஞ்சமடைந்த பறவைகள் கூட்டத்தை பொதுமக்கள் ரசித்து சென்றனா்.

ராசிபுரம் ரயில் நிலையம் அருகே நீா்தேங்கிய பகுதியில் ஏராளமான கருவேல மரங்கள் வளா்ந்துள்ளன. இந்நிலையில், புதன்கிழமை மாலை அப்பகுதியில் திடீரென ஏராளமான பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து கருவேல மரங்களில் அமா்ந்தன. அது, வெள்ளைப் போா்வை போா்த்தியதுபோல காட்சியளித்தது. இக்காட்சியை அப்பகுதியில் செல்வோா் நின்று பாா்த்து ரசித்து படம்பிடித்து சென்றனா்.

நீா்நிலைகளின் நடுவே மரத்தில் ஏராளமான பறவைகள் பனி படா்ந்ததுபோல அமா்ந்துள்ள காட்சியை வேடிக்கை பாா்க்க கூட்டம் கூடியதால், அப்பகுதி சுற்றுலா தலம் போல காட்சியளித்தது.

தூய்மைப் பணியாளா்களை அரசே நியமிக்க வேண்டும்: நலவாரியத் தலைவா் ஆறுச்சாமி

இடையூறாக நிறுத்தியிருந்த 16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குமரியில் கடற்கரைப் பகுதிக்கு செல்லத் தடை

வியாபாரி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு: போலீஸாா் விசாரணை

நடுவலூா் பகுதிகளில் நாளை மின்தடை

SCROLL FOR NEXT