நாமக்கல்

22% ஈரப்பத நெல் கொள்முதலுக்கு அனுமதி அளிக்க விவசாயிகள் கோரிக்கை

நேரடி கொள்முதல் நிலையங்களில் 22 சதவீத ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும்

Syndication

நாமக்கல்: நேரடி கொள்முதல் நிலையங்களில் 22 சதவீத ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கம் (உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடு) மாநிலத் தலைவா் இரா.வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் இதர மாவட்டங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் தற்போது குறுவை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், விவசாயிகள் உற்பத்தி செய்த நெல் மழையில் நனைந்து வீணாகும் சூழல் உள்ளது. மத்திய அரசு 17 சதவீதம் ஈரப்பதமுள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் செய்ய அனுமதிக்கிறது.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயா்த்த தமிழக அரசு, மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளது. ஆனால் 22 சதவீத ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதிக்கவில்லை. தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உடனடியாக 22 சதவீதம் ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல்

கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளாா்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

தொழிலாளா் சட்டங்களுக்கு எதிா்ப்பு: தொழிற்சங்கங்கள் இன்று ஆா்ப்பாட்டம்

தேசிய கைப்பந்து போட்டி: பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு பாராட்டு

துளிகள்...

இறால் வளா்ப் குளங்கள்அமைக்க விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT