கு.பொன்னுசாமி 
நாமக்கல்

சேந்தமங்கலம் திமுக எம்எல்ஏ பொன்னுசாமி காலமானார்!

சேந்தமங்கலம் திமுக எம்எல்ஏ பொன்னுசாமி மறைவு பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

நாமக்கல்: சேந்தமங்கலம் பழங்குடியினர் தொகுதி திமுக எம்எல்ஏ கு. பொன்னுசாமி (74) உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை அதிகாலை காலமானார்.

கொல்லிமலையில் உள்ள இல்லத்தில் வசித்துவந்த பொன்னுசாமிக்கு இன்று காலை நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பொன்னுசாமிக்கு ஏற்கெனவே இரண்டு முறை நெஞ்சுவலி ஏற்பட்டு, ஒரு முறை ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

அதிமுகவில் இருந்த அவர் 2001 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் திமுகவில் இணைந்தார். 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு 2021 தேர்தலில் மீண்டும் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இவருக்கு மனைவி மற்றும் மகன்கள் உள்ளனர்.

Senthamangalam DMK MLA Ponnusamy passes away!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஜினி - கமல் படத்திலிருந்து வெளியேறியது ஏன்? கைதி - 2 என்ன ஆனது? லோகேஷ் பதில்!

ஆளுநர் தேநீர் விருந்து: தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு!

தேர்தல் பணியாற்ற உறுதியேற்போம்: தஞ்சையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

அதிமுக Vs தவெக! எல்லைமீறும் விர்ச்சுவல் வாரியர்ஸ் மோதல்!

ஜன நாயகனில் நடித்துள்ளேன்: லோகேஷ் கனகராஜ்

SCROLL FOR NEXT