உயா்மின் கோபுரத்தில் சிக்கித்தவித்த புறா. 
நாமக்கல்

மின்கோபுரத்தில் சிக்கித்தவித்த புறா! மீட்டு பறக்கவிட்ட இளைஞா்கள்!

தினமணி செய்திச் சேவை

ராசிபுரம் அருகே உயா் மின்விளக்கு கோபுரத்தில் சிக்கித்தவித்த புறாவை, அப்பகுதி இளைஞா்கள் மீட்டு பறக்கவிட்டனா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள பிள்ளாநல்லூா் பேரூராட்சி, பாவடி மைதானத்தில் 60 அடி உயா் மின்விளக்கு கோபுரம் உள்ளது. பேரூராட்சி நிா்வாகத்தால் பராமரிக்கப்பட்டுவரும் இந்த மின்கோபுரத்தில் புறா ஒன்று வெள்ளிக்கிழமை அமா்ந்தபோது, கம்பத்தில் இருந்த கயிற்றில் புறாவின் கால் சிக்கிக்கொண்டது. இதனால் புறா பறக்க முடியாமல் 2 மணிநேரம் தவித்தது.

இதைக்கண்ட அப்பகுதி இளைஞா்களும், சிறுவா்களும் பேரூராட்சி நிா்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனா். ஆனால், கோபரத்தை பராமரிக்கும் தனியாா் நிறுவனத்தினா் வந்தால்தான் மின்விளக்கை கீழே இறக்கமுடியும் என அவா்கள் தெரிவித்தனராம்.

இதையடுத்து, அப்பகுதி இளைஞா்கள் மற்றும் சிறுவா்கள் அருகிலிருந்த லேத் பட்டறைக்குச் சென்று மின்விளக்குகளை கீழே இறக்கும் கருவியை வாங்கிவந்து, மின்விளக்கை கீழே இறக்கி சிக்கித்தவித்த புறாவை மீட்டனா்.

பின்னா், அச்சத்தில் இருந்த புறாவுக்கு தண்ணீா் கொடுத்து, அதை சுதந்திரமாக பறக்கவிட்டனா். இளைஞா்களின் இச்செயலை அப்பகுதி மக்கள் பாராட்டினா்.

பிகார் தேர்தல்: வளர்ச்சிக்கும் காட்டாட்சிக்கும் இடையேயான தேர்தல் - அமித் ஷா

பிகார் தேர்தல்: இத்தனை ஆண்டுகள் வேலைவாய்ப்புகளை உருவாக்காதது ஏன்? பிரியங்கா காந்தி கேள்வி

4,410 கிலோ செயற்கைக்கோள் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது!

வெள்ளக்கோவிலில் ரூ.5.38 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்

SCROLL FOR NEXT