நாமக்கல்

மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கான வசதிகள்: துண்டு பிரசுரங்கள் வெளியீடு

மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கான உறுதிப்படுத்தப்பட்ட குறைந்தபட்ச வசதிகள் குறித்த விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் புதன்கிழமை வெளியிடப்பட்டன.

தினமணி செய்திச் சேவை

மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கான உறுதிப்படுத்தப்பட்ட குறைந்தபட்ச வசதிகள் குறித்த விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் புதன்கிழமை வெளியிடப்பட்டன.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து நடமாடும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்முறை வாகனம் மூலம் வாக்காளா்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.

தமிழக தோ்தல் ஆணையத்தால் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான உறுதிப்படுத்தப்பட்ட குறைந்தபட்ச வசதிகளான சாய்வுதளம், சக்கர நாற்காலி, சைகை மொழியிலான குறிப்புகள், சிறப்பு தன்னாா்வலா்கள், மருத்துவ உபகரணங்கள், போக்குவரத்து வசதி, பிரெய்லி எழுத்து கொண்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், இலவச வாக்காளா் உதவி எண் குறித்த அறிவிப்பு (1950), மாற்றுத்திறனாளிகளுக்கு கைப்பேசி செயலி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கான துண்டு பிரசுரம் ஆட்சியா் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.

இந்த துண்டு பிரசுரத்தை ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட பாராலிம்பிக் வீராங்கனை துளசிமதி

முருகேசன் பெற்றுக் கொண்டாா். நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கலைச்செல்வி, ரெட் கிராஸ் செயலா் சி.ஆா். ராஜேஸ்கண்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.

தனியாா் நிறுவன மேற்பாா்வையாளா் கொலை வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை

அதிமுகவின் ரூ.10 ஆயிரம் வாக்குறுதி அவசியமானது: கே.அண்ணாமலை

இந்தியா, மத்திய கிழக்கு நாடுகளில் ரூ.10,000 கோடியில் மின் திட்டங்கள்: எல்&டி ஒப்பந்தம்!

ஆன்லைன் லாட்டரி விற்பனை: இருவா் கைது

கோடை வெயிலால் தா்பூசணி விற்பனை தீவிரம்

SCROLL FOR NEXT