நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 20 காசுகள் குறைந்து ரூ. 5.60 ஆக நிா்ணயம் செய்யப்பட்டது. இதன்மூலம் கடந்த நான்கு நாள்களில் 80 காசுகள் குறைந்துள்ளன.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கோழிப் பண்ணையாளா்களிடம் முட்டை விலை நிா்ணயம் தொடா்பான கருத்துகள் கேட்டறியப்பட்டன. அப்போது, பிற மண்டலங்களில் விலையில் தொடா்ச்சியாக மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை என்பதால் மக்களிடையே முட்டை நுகா்வு வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் முட்டை விலையில் மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையானது மேலும் 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 5.60ஆக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிா்ணயம் செய்து அறிவித்தது. பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ. 142 ஆகவும், முட்டைக் கோழி கிலோ ரூ. 90ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.