சேலம்

சேலத்தில் இருந்து திருச்சிக்கு நாளை முதல் சிறப்புப் பயணிகள் ரயில் இயக்கம்

சேலத்தில் இருந்து திருச்சிக்கு சிறப்புப் பயணிகள் ரயில் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.

DIN

சேலத்தில் இருந்து திருச்சிக்கு சிறப்புப் பயணிகள் ரயில் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.
சேலத்தில் இருந்து திருச்சிக்கு பயணிகள் ரயில் இயக்க வேண்டும் என சேலம், நாமக்கல் மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதை பரிசீலித்த சேலம் ரயில்வே கோட்டம், திருச்சி - கரூர் பயணிகள் ரயிலை சேலம் வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இந்த ரயில் பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் பரீட்சார்த்த முறையில் 3 மாதங்களுக்கு இயக்கப்பட உள்ளது.
பயணிகளின் கூட்டத்தைப் பொறுத்து தொடர்ந்து இயக்கப்பட உள்ளது. திருச்சியில் இருந்து வண்டி எண் 76833 திருச்சி - கரூர் பயணிகள் ரயில் திருச்சியில் காலை 9.35 மணிக்கு புறப்பட்டு கரூருக்கு 11.35 மணிக்கு வந்து சேருகிறது. பின்னர் அங்கிருந்து வண்டி எண் 06833 கரூர் - சேலம் பயணிகள் ரயில், கரூரில் இருந்து 11.40 மணிக்கு
புறப்பட்டு, பகல் 1.20 மணிக்கு சேலம் வந்து சேருகிறது.
அதேபோல வண்டி எண் 06834 சேலம் - கரூர் சிறப்பு பயணிகள் ரயில், சேலத்தில் இருந்து 1.30 மணிக்குப் புறப்பட்டு, 3.20 மணிக்கு கரூர் செல்கிறது. பின்னர் அங்கிருந்து 3.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.35 மணிக்கு திருச்சி சென்றடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

முதல்வா் ஸ்டாலின் ஜன.3-இல் திண்டுக்கல் வருகை!

பனி மூட்டம்: 19 விமானங்களின் சேவைகள் ரத்து

ஆஸ்திரேலியா: போண்டி கடற்கரை தாக்குதலில் ஈடுபட்ட தந்தை-மகன் இந்திய வம்சாவளியினா்

SCROLL FOR NEXT